தமிழ் மக்கள் அனைவருக்கும் பிரதமரின் தைத்திருநாள் வாழ்த்து
பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா - அறுவடை விழா. இதுவே உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்ற தைப்பொங்கல் விழாவுக்கான அடிப்படையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட தைத்திருநாள் வாழ்த்து அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். தமிழர்கள் தம் வாழ்வில் கொண்டாடி மகிழ்கின்ற பண்டிகைகளில் உன்னதமானதோர் நிகழ்வு இந்த தைத்திருநாளாகும்.
உழவர் பெருமக்கள் தங்களின் கடின உழைப்புக்கு பயன் நல்கிய இயற்கைக்கு, தமது நன்றியுணர்வினைத் தெரிவிக்கும் திருநாளாக இத்தைத்திருநாள் விளங்குகின்றது.
அதனால் இத்தைப்பொங்கல் திருநாளிலே அனைவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மகிழ்கின்றனர். இயற்கையின் பெருமைக்கு முக்கியத்துவம் நல்கும் இத்திருவிழா, நன்றி மறவாத உன்னத பண்பினை நம் அனைவருக்கும் எடுத்தியம்பி நிற்கிறது.
இனம், மதம், மொழி ஆகியவற்றினால் நம் தேசம் வேறுபட்டிருந்தாலும் - நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்று சொல்வதிலே பெருமை கொள்வோம்.
நம் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாக அமைவதே இத்தேசத்தின் சுபீட்சத்துக்கான அத்திவாரம்.
நாட்டைக் கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத்தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது. இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும்.
அனைத்து மக்களும் நிறைந்த சௌபாக்கியத்துடன், அமைதியும் சமாதானமும் நின்று நிலைக்கும் வகையில், மகிழ்வோடு வாழ இந்த நன்னாளிலே எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான நன்னாளிலே, தைப் பொங்கல் பண்டிகையை
கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் எம் சக உறவுகளாகிய தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

காமெடி நடிகர் செந்திலின் மகனா இது... என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? திடீரென்று அடித்த அதிர்ஷ்டம் Manithan

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022