வெதுப்பக தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வட் வரியின் ஊடாக வெதுப்பக தொழிற்துறை பாதிப்படைந்த நிலைமையில் உள்ளது.
வெதுப்பக உற்பத்திகளின் விலை
இந்த நிலையில் அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.
அத்துடன் வெதுப்பக உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |