குருநகர் இறங்கு துறையில் உறங்கிய நீர்கொழும்பு நபரால் பெரும் பரபரப்பு!
நீர்கொழும்பில் இருந்து வந்து குருநகர்ப் பகுதியிலுள்ள இறங்குதுறையில் படுத்துறங்கிய இனந்தெரியாதவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாகப் படுத்துறங்குவது மீனவர்களால் அவதானிக்கப்பட்டு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு இரு தரப்பும் வருகை தந்தபோதும் இனந்தெரியாதவரை அழைத்துச் செல்ல இரு தரப்பும் மறுத்துவிட்டன.
இருப்பினும் சுகாதார உத்தியோகத்தர்கள் உடனடியாக அவரது மாதிரியைப் பெற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோதும் அவரைக் கைதுசெய்யப் பொலிஸாரும் மறுத்துவிட்டனர்.
இதனால் நேற்று அப்பகுதியின் ஊடாக மீன்பிடிப் படகுகள் செல்வது தடுக்கப்பட்டு பிறிதொரு பகுதியின் ஊடாக அனுமதிக்கப்பட்டது.
பி.சி.ஆர். மாதிரி பெறப்பட்ட நீர்கொழும்பு வாசி பரிசோதனை முடிவு வரும் வரைக்கும் குருநகர்ப் பகுதியில் ஒரு தனியான இடத்தில் தங்கவைக்கபட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan