மயானத்தில் இருந்த கல்லறைகள் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க மரங்கள் திருட்டு
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் காணப்படுகின்ற பெறுமதி மிக்க நாவல் மரங்களை இரவு வேலைகளில் எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்திச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டுமின்றி கிராமங்களிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வீடுகளில் இல்லாதவர்களின் காணிகளிலும் உள்ள மரங்களை இரவு வேலைகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டி செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் உள்ள கல்லறைகளை இரவு வேலைகளில் உறவினர்களின் எந்தவித அனுமதியும் இன்றி உடைக்கப்பட்டு வருகின்றது.
உரிய நடவடிக்கை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களிலும் இடம் பெறாத இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தநிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில் பாரிய பெறுமதி மிக்க மரங்களை காண முடியாத நிலை ஏற்படும் எனவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




