நூலிழையில் உயிர் தப்பிய ட்ரம்ப்: வெளியான கிரஃபிக் காணொளி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து சற்று தலைசாய்த்த நிலையில் அவர் தப்பிக்கும் கிரஃபிக் காணொளி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் களமிறங்கவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
விசாரணை
குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றதையடுத்து அவரின் பாதுகாவலர்களால் உடனே அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
This new graphic of Trump assassination attempt is actually wild pic.twitter.com/lmDgqThRSv
— kira ? (@kirawontmiss) July 16, 2024
விசாரணையில் அவர் மீது தாக்குதல் நடாத்தியது அதே பகுதியை சேர்ந்த தாமஸ் மெத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் என கண்டுபிடிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய மெத்தியூவை இரகசிய சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |