அதிக வசதிகளுடன்கூடிய சமூகங்களை உருவாக்க ஒன்ராறியோ அரசு அறிமுகப்படுத்தியுள்ள மானியம்
மூதாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமுகத்துடன் முழுமையாக இணைந்த வாழ உதவும் வகையில் ஒன்ராறியோ அரசு 'Enabling Accessibility and Senior Empowerment (EASE)' என்ற புதிய மானியத்தின் மூலம் 2.2 மில்லியனை டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்நிதி, பூங்காக்கள், ஏரிக்கரை போன்ற இடங்களில் எளிதில் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான கழிப்பறைகள், நகர்த்தக்கூடிய கடற்கரை விரிப்புகள் மற்றும் உதவி சாதனங்களுக்கான மின்னேற்றி நிலையங்கள் போன்றவற்றுக்கான திட்டங்களுக்கு வழங்கப்படும்.
புதிய மானியம்
நகராட்சிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், பழங்குடி நிர்வாக அமைப்புகள் ஆகியன இவற்றுக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பில் அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்து தெரிவிக்கையில், “EASE மானியத்தின் மூலம், எமது அரசாங்கம் தடைகளை அகற்றி, அனைத்தும் உள்ளடங்கலான சமூகங்களை உருவாக்குகிறது.
முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.