பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு
முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
அவரின் பேத்தி காயமின்றி தப்பியுள்ளதோடு, முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam