கிராம உத்தியோகத்தர் பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவிப்பு
கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்கள் நேற்று(27.01.2024)வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சை
பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்தினால் கிராம உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்றது.
அரச சேவை
இந்த பரீட்சை முடிவுகளின்படி 2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அவர்கள் அரச சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
