டித்வா' நிவாரணத்தில் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் அதிரடியாக கைது
'டித்வா' சூறாவளியினால் முழுமையாகச் சேதமடைந்த வீடொன்றுக்கான நிவாரணத் தொகையில் லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
'டித்வா' சூறாவளியினால் முழுமையாகச் சேதமடைந்த வீடொன்றுக்கான அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து, 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட சோதனை
மொனராகலை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பெலவத்தை சீனி தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபரால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த இருவரும் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam