கிளிநொச்சி நகரில் படிப்படியாக அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
கிளிநொச்சி நகரில் படிப்படியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் மக்கள் நடமாட்டம் படிப்படியாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் குறித்த மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் பிரிவு திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து பொருத்தமற்ற காரணங்களுடன் நடமாடும் மக்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தொடர்ந்தும் குறித்த நடமாட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்படுவீர்கள் எனப் பொதுமக்களிற்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகின்றது.
அதேவேளை ஏ9 வீதியுடன் இணையும் அனைத்து இணைப்பு வீதிகளிலும் படையினர் கடமையில்
ஈடுபட்டுள்ளனர். மேலும் இரணைமடு சந்தி, டிப்போ சந்தி மற்றும் கரடிபோக்கு
சந்தி, பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு மக்களின்
தேவையற்ற நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதுடன், சோதனைகளும் இடம்பெற்ற
வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
