இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் தடை! பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை முடியும் வரை தடை
இந்த நிலையில், குறித்த தடையானது பரீட்சை முடியும் வரை நடைமுறையில் இருக்குமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தடைகளை தனி நபரோ அல்லது நிறுவனமோ மீறினால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைப்பதன் மூலம் முறைப்பாடுகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொலிஸ் தலைமையகம்: 0112421111
- பொலிஸ் அவசர பிரிவு: 119.
- அவசர இலக்கம் (பரீட்சைகள் திணைக்களம்): 1911
- பரீட்சை ஆணையாளர் நாயகம் அலுவலகம்: 0112785211, 011275212
- பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு கிளை: 0112784208 - 0112784537
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri