புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேற்றின்படி முல்லைத்தீவு விசுவநாதர் ஆரம்பப்பாடசாலை மாணவி செல்வி சி.பிளஸ்னா எஸ்ரி 180 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை மாணவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மு/விசுவநாதர் ஆரம்பப்பாடசாலை தோற்றியோர் - 46 பேர்
வெட்டுப்புள்ளிக்கு மேல் -15 பேர்
100 புள்ளி மேல் - 30 பேர்
70 புள்ளிக்கு மேல் - 40பேர்
உயர் புள்ளி - 180
மன்னார்
வெளிவந்துள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் 05 பேர் நேற்றைய தினம் (4) வியாழக்கிழமை மாலை கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எஸ்.எப்.பஸ்மி தலைமையில் பாடசாலை மைதானத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் விளையாட்டுப் போட்டி மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
றிப்கி றிஸாமா-153 புள்ளிகளையும்,ஹிஜாஸ் ஹிபா 137 புள்ளிகளையும், லுக்மான் அஹமட் 136 புள்ளிகளையும், அர்ஷத் கான் ஹயாலீனா-133 புள்ளிகளையும் அபான் ஆசிப் அஹமட்-131 புள்ளிகளையும் பெற்று சித்தி அடைந்த நிலையில் குறித்த 5 மாணவர்களும் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாவது நிலையை பெற்றுள்ளார்.
குறிப்பாக இம் முறை மன்/றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அவர்களில் 8 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.
மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் 174 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு
தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா அவர்கள் 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற மாணவியாக சாதனை படைத்து கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் பிறைசூடி (அபிவிருந்தா உத்தியோகத்தர் ) கிரிஜா ஆகியோரின் புதல்வியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.
இன்று காலை பாடசாலைக்கு சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார்.
அத்துடன் நாவற்காடு கனிஷ்ட வித்தியாலயத்தில் ஏழு மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த நிலையில் ஏனைய மாணவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.








மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
