பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி பொலிஸ் காவலில்...
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் பல மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்தார் என்று குற்றச்சாட்டை எதிர்த்து, அவர் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை செய்தார்.
எனினும் உயர் நீதிமன்ற நீதியரசர், முன்னாள் ஜனாதிபதியை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
ஆர்ஜென்டினா தூதரகத்தில் தஞ்சம் கோருவது
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு சார்பாக, "பொருத்தமான மேல்முறையீடு" ஒன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக போல்சனாரோவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அவர் ஆர்ஜென்டினா தூதரகத்தில் தஞ்சம் கோருவது குறித்து பரிசீலித்ததற்கான ஆதாரங்களையும் இந்த உத்தரவின்போது நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததற்காக வலதுசாரி முன்னாள் தலைவருக்கு செப்டம்பர் மாதம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர் மேன்முறையீட்டை இறுதி செய்தமையால், சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |