5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை.. வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, ஓகஸ்ட் 6 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகள் முன்னெடுக்க தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடை
அதன்படி, குறித்த திகதிக்கு பின்னர், பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துதல், மேற்படி தேர்வுக்கான யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், சுவரொட்டிகள், பதாகைகள் வழங்கல் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், துண்டுப்பிரசுரங்கள் அல்லது அதுபோன்ற பொருட்களை மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுதல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, நாடு முழுவதும் 2,787 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





முத்தக் காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன்.. நிச்சயத்துக்கு பின் விஷால் எடுத்த அதிர்ச்சி முடிவு Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
