ட்ரம்புக்கு ஆபத்து நேர்ந்தால் அமெரிக்காவை ஆளப்போகும் நபர்..!
நாட்டில் மிகப்பெரிய ஆபத்து நேர்ந்தால் தான் ஜனாதிபதி பொறுப்பை எடுக்கத் தயார் என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்புக்கு தற்போது 79 வயதான நிலையில், அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் சுறுசுறுப்புடன் கடமையாற்றி வருவதாகவும் வான்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கொலை முயற்சிகள்
மேலும், மீதமுள்ள பதவிக்காலத்தை முழுமையாக நிறைவேற்றி அமெரிக்க மக்களுக்கு சிறந்த பணிகளை செய்வார் என தான் நம்புவதாகவும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்பாராத நிகழ்வுகளை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பதாகவும் அதனால் அவரது கால்கள் வீங்கிய நிலையில் இருந்ததாகவும் ஜூலை மாதம் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
மேலும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, அவர் இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 4 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
