நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் (Photos)
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகியது.
அதன் அடிப்படையில் பல மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கல்முனை
இம்முறை வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை அல் /மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 04 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன்,142 புள்ளிகளை 2 மாணவர்களும் 141 புள்ளிகளை 2 மாணவர்களும் பெற்று வெட்டுப் புள்ளியை அண்மித்துள்ளனர்.
மேலும் இப்பரீட்சைக்கு தோற்றிய 85 மாணவர்களில் 69 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும்,பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை
வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் இருந்து 17 மாணவர்கள் வெட்டுப் புள்ளியினைக் கடந்து சித்தியடைந்துள்ளனர்.
விண்ணப்பித்த 93 மாணவர்களில் 92 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததன் அடிப்படையில் 143 - 200 - 17 மாணவர்கள்
100 - 142 - 48 மாணவர்கள்
70 - 99 - 20 மாணவர்கள்
சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் மொத்த எண்ணிக்கையில் 6 மாணவர்களே 70 ற்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் சித்தி வீதம் அதிகரித்துள்ளதோடு 70 புள்ளிகளுக்கு குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சித்தியடைந்த மாணவர், முஹம்மது ஜெஸீர் மஸ்ஹர் பைஸி - 174 முஹம்மது அலியார் அம்னா சாரா - 171 முஹம்மது தௌபீல் முஹம்மது தஸ்கீன் - 158 முஹம்மது அமீம் பாத்திமா சுமா - 157 நூஃலெப்பை சுஜாத் அஹ்மத் - 155 அப்துல் ஜெலீல் ரீஸா மெஹ்சின்- 154 சுபைத் முஹம்மது ஆஷிக் - 152 முஹம்மது அன்சார் பிஸ்மி அஸீலா - 150 மஹ்மூத் நியாஸ் மஹ்தியா பானு - 150 புர்ஹானுதீன் அநிஷா அத்ன்- 149 ஆஷிக் இஸ்லாம் ஐமன் சதா - 148 ஜலால்தீன் முஸ்ரி ஹனீப் - 147 முஹம்மது பைரூஸ் சஹ்சார் அஹ்மத் -147 முஹம்மது இர்சாத் முஹம்மது அஸ்ஜத்-146 முஹம்மது ரஷ்மி சைத் அஹ்மத் -146 நௌசாத் அஹ்சன்- 143 ஹம்மாத் பாத்திமா பஹ்மிதா -143
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்துள்ளார.
இதில், என்.சாரிக் அஹமட் 159, எஸ்.எப்.ஹில்மா 149, ஏ.எம்.சைமி சதா 148, எம்.எப்.எப்.ஹயா 147, எம்.ஐ.எப்.றிஸாப் 145 ஆகிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களான ஏ.ருபாய்தீன், கௌசல்யா மற்றும் ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.பி.பாயிஸ் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை எழுதிய மாணவர்களில் 30 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும், அயராது உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.அஜ்மீர், ஆரம்பப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜாபிர் கரீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட அனைவருக்கும் அதிபர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி
வெளியாகிய தரம் -05 புலமைப்பரிசில் பரிட்சையில் 263 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் .
புலமைப் பரிசில் பரீட்சைக்கு கிளிநொச்சியில் தமிழ்மொழி மூலம் 2,212 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 2,185 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், பெறுபேறுகளுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழ்மொழி மூல பரீட்சைக்கு 143 வெட்டுப் புள்ளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 263 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். மேலும் 1853 மாணவர்கள் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
