புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.
2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam