இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்! நுகர்வோருக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெராஞ்சிகே தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ள புதிய முக்கிய வர்த்தமானி காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய 2016ஆம் ஆண்டு வாகன மதிப்பீட்டு வர்த்தமானியைத் திருத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
தற்போதைய வர்த்தமானி சுமார் 10 ஆண்டுகள் பழமையானது. உலக சுங்க அமைப்பின் (WCO) மரபுகளின்படி வாகனங்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க இயலாததால், அரசாங்கம் இந்த புதிய திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது.
வாகனங்களின் விலைகள் உயரும் அபாயம்
இது வாகனங்களின் மதிப்பை மதிப்பிடும் முறையை மாற்றும். அதன் விளைவாக, வரிகள் அதிகரிப்பதால் எதிர்காலத்தில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும்.
ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 150 சதவீத கூடுதல் வரியின் காரணமாக, சந்தைக்கு வரும் புதிய வாகனங்களின் விலைகள் இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் வாகனம் வாங்க விரும்பும் நுகர்வோர், தற்போதைய விலையில் வாகனங்களை வாங்குவதே அதிக லாபம் தரும் என்றுள்ளார்.
மேலும் தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் பழைய விலையில் இருப்பதாலும், இறக்குமதியாளர்கள் தங்கள் வங்கி வட்டியை ஈடுசெய்வதற்காக வாகனங்களை குறைந்தபட்ச லாபத்தில் விற்பனை செய்வதாலும், நுகர்வோர் தற்போது அதிகப் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri