மேல் மாகாணத்தில் நியமக்காலம் முடிவடைந்த வாகன வருவாய் உரிமங்கள் குறித்த அறிவிப்பு
மேல் மாகாணத்தில் நியமக்காலம் முடிவடைந்த (renew expired), வாகன வருவாய் உரிமத்தை (vehicle revenue license) புதுப்பிக்க சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மாதம் 12ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, நிறைவுப்பெறும் வாகனங்களுக்கான வருவாய் உரிமங்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன வருவாய் உரிமங்களை வழங்கும் கணினி அமைப்பின் செயலிழப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண தலைமை செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, வாகன வருவாய் உரிமங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.