கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கைவிடப்படாது
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கைவிடப்படாது என ஆளும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி ஆகியோர் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
கல்விமறுசீரமைப்பு நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் கைவிடப்படாது என அமைச்சர் பன்னிலகே தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பில் எழுந்துள்ள தொழிநுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் உத்தேச கல்வித்துறை மறுசீரமைப்புகள் கைவிடப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடரும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்த அரசியல் தரப்புகள் கல்வி மறுசீரமைப்பு குறித்து போலி பிரசாரங்களை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை திசை திருப்பும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி திட்டமிட்டவாறு கல்வித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri