தேர்தலை பிற்போட முயற்சிக்கும் அரசாங்கம் : சந்திரசேகரன் குற்றச்சாட்டு
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று(26.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்றது, இதனால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி எடுத்து வருகின்றார்கள்.
கடந்த 76 வருட ஆட்சியாளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகின்றோம், அவர்களுடைய சகாப்தம் முடிவுக்கு வர போகின்றது, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் புதிய அரசாங்கம் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலும் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |