பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய சலுகை கடன் திட்டம்
பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய சலுகை கடன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மறுவாழ்வு செய்வதற்காக இந்த கடன் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இந்த கடன் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு நிதி வழங்கப்படும்.
சலுகை காலம்
மேலும் அதன் வட்டி விகிதம் 3 சதவதம் வரை குறைவாக இருக்கும். இந்த கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கப்படும்.

நுண் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 250,000 ரூபாய் ஆகும்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ஒரு மில்லியன் ரூபாயாகும்.