இலங்கையில் நாளாந்தம் புதுப்பிக்கப்படும் கோவிட் புள்ளிவிபரங்கள்
இலங்கையில் நாளாந்த கோவிட் தொற்றுக்களின் புள்ளிவிபரங்கள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
களத்திலும், தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்ட விரைவான என்டிஜென் சோதனைகள் மூலம் அடையாளம் காணப்படும் தொற்றாளிகள் தொடர்பான தரவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதே இதற்கான காரணம் என்று, சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.
தொற்றாளிகள் குறித்த தொற்றுநோயியல் பிரிவினால் பெறப்பட்ட தகவல்கள் நாளாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.
நாளாந்த அடிப்படையில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுகின்றன.
சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு தகவல்களை பெறும்போது அந்தந்த புள்ளிவிவரங்களுடன் தொடர்புடைய தரவுகள் சேர்க்கப்படும் என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
