அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ராஜாங்க அமைச்சர் தயாசிறி அதிருப்தி
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எம்.வீ. எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது நாட்டுக்கு முற்று முழுதாக தேவையற்ற ஓர் பிரச்சினை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கடல் வளம் பாரியளவில் அழிவடைவதற்கு இந்த கப்பல் விபத்து வழியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் சுதந்திரக் கட்சி அதிகாரபூர்வமாக பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் விவகாரத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.