பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்துவது அல்லது ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சில தரப்பினரால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது.
கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர்
அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர், சில ஊடகங்களால் தம்மை தவறாக மேற்கோள் காட்டி, இந்த விடயத்தை விளக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று அரசாங்கம் இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தவோ அல்லது நீக்கவோ முடியாது என்றும், புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டவுடன், அந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
