அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது
அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் டாலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்குப் பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் 1,500 ஊழியர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினாலே நாட்டின் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரணிகளுக்கு யாரைக் கொண்டு வந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால முறையான வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் டொலர்களைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் பேரணிகளை நடத்தி வருகின்ற போதிலும், பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்டினியால் தவித்து வருவதாக திலித் ஜயவீர மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.