அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லையா!
அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறைச்சாலையை நிர்வாகம் செயலற்று போய் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலமை தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையில் பலியான உயிர்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற கலவர நிலைமைகளின் போது எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த அனுரகுமார திசாநாயக்க அந்த பொறுப்பினை ஆளும் தரப்பு ஏற்க வேண்டும் என தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தார் என சஜித் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது சிறைச்சாலையில் இடம் பெற்ற கலவரத்திற்கான பொறுப்பினை ஆளும் தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டி உள்ளார்.
சிறைச்சாலையில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாக கட்டமைப்பின் வீழ்ச்சியே என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சிஸ்டம் சேஞ்ச் செய்வதாக தெரிவித்து ஆட்சி பீடம் ஏறினாலும் இந்த அரசாங்கத்தின் சிஸ்டம் தோல்வி அடைந்துள்ளதாக சஜித் பிரேமதாசர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அரசாங்கம் அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு முடியவில்லை என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் செய்வது போல் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு கண்துடைப்பிற்காக விசாரணை குழுக்களை உருவாக்கி அதன் ஊடான அறிக்கைகளை சமர்ப்பிக்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பெரும் சோக சம்பவத்தின் பின்னணி தொடர்பில் கிரமமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சுயாதீன குழு ஒன்றின் மூலம் பக்க சார்பற்ற விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தியுள்ளார்.