வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விடயம்- அமைச்சின் செயலாளருக்கு, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
பிரசவத்தின் போது தம்மிடம் சிகிச்சை பெற்ற பெண்களை சட்டவிரோதமாக கருத்தடை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீண்டும் பணியில் சேர்த்தமை தொடர்பில் அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருநாகல் வைத்தியசாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகளில்,வைத்தியர் ஷாபி ஷியாப்தீன் குற்றம் செய்தவர் என கண்டறியப்பட்டதை அடுத்து அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்படாமல், வேதன நிலுவைத் தொகையுடன் மீண்டும் அவரை பணியில் அமர்த்துவது தொடர்பில் அமைச்சின் செயலாளர் உரிய முறையில் செயற்படவில்லை என்று அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.