2500 பசு மாடுகள் இறக்குமதி செய்யப்படும்: அரசாங்கம்
அரசாங்கம் சுமார் 2500 பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
துரித கதியில் பசு மாடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கால்நடை வள இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான்கு நிறுவனங்களினால் இவ்வாறு மாடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
இவ்வாறு பசு மாடுகளை வளர்ப்பதற்காக கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் நான்கு காணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளன.
பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு பசு மாடுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam