அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல மில்லியன் ரூபா நட்டம்
கொழும்பு - கொம்பனி தெரு பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒப்பந்ததாரருக்கு அரசாங்கம் தற்போது 400 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய திட்டத்தின் ஆய்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் இன்று (28) இதை வெளிப்படுத்தியுள்ளார்
கொம்பனி தெரு பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள மூன்று மேம்பாலங்களில், பாலதக்ஷ மாவத்தையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், பழைய கொம்பனியவீதிய காவல் தலைமையகத்தினூடாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
6 முக்கிய நிறுவனங்கள்
அதன்படி, 6 முக்கிய நிறுவனங்கள் இடிக்கப்பட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.மேலும் திட்டம் சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திட்டத்தை விரைவுபடுத்தி கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.