இலங்கையில் கோவிட் தடுப்பூசி நிரப்பும் ஆலையை நிறுவுமாறு வலியுறுத்து
இலங்கையில் கோவிட் தடுப்பூசி நிரப்பும் ஆலையை நிறுவ சினோபார்ம் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கோஹோன, தூதரக அதிகாரிகளுடன், சினோபார்மின் பீய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஒப் பயாலஜிகல் ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்திற்கு (சிஎன்பிஜி) சென்றபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
சினோஃபார்ம் தலைமையகத்தின் துணைத் தலைவர் ஷி ஷெங்கி, உயிரியல் பொருட்கள் பிரிவின் தலைவர் ஜு ஜிங்ஜின், மற்றும் சர்வதேச பிரிவின் துணைத் தலைவர் யான் பிங் ஆகியோர் இலங்கை தூதரை தடுப்பூசி ஆலைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆலையின் மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் வருடத்திற்கு ஐந்து பில்லியன் அளவுகளை உற்பத்தி செய்யும் தடுப்பூசி உற்பத்தி ஆலைக்கும் பாலித கொஹன அழைத்துச் செல்லப்பட்டார்.
சிஎன்பிஜி 1919 இல் தொடங்கியதிலிருந்து அதன் தற்போதைய அதிநவீன வசதி வரை படிப்படியாக முன்னேறுவது குறித்தும் இலங்கை தூதுக்குழுவுக்கு விளக்கப்பட்டது.
இதன்போதே இலங்கையில் ஒரு கொவிட் தடுப்பூசி நிரப்பும் ஆலையை நிறுவுவதன் நன்மை. அவர் உள்ளூர் சந்தை வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தில் பரந்த சந்தை வாய்ப்பையும் கொஹன விளக்கினார்.
இந்தநிலையில் சினோஃபார்ம் நிறுவனம் நிர்வாகம், பாலித கொஹனவின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
