யாழில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 70 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலையில் 13 பேருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 07 பேருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில்,பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,நாடு முழுவதும் நாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
