வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் மேலும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த ஆடைத்தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் 4 பேருக்கு கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணிய சிலரிடம் இன்று (19.05) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையில் மேலும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பாரிய
கோவிட்கொத்தணி உருவாகி பல பிரதேசங்கங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில்,
வவுனியாவில் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தொற்றாளர்கள் 10 ஆக
அதிகரித்த நிலையிலும், அது மூடப்படாது தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை வவுனியா
மாவட்டத்தில் பாரிய கொத்தணியை உருவாக்கலாம் என அரசியல் பிரமுகர்களும்,
மக்களும் அச்சம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.