கிரிக்கெட் வீரருக்கு கோவிட் தொற்று! திடீரென ஒத்திவைக்கப்பட்ட T20 போட்டி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளைவரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய வீரர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்ந தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று இடம்பெறவிருந்த இரண்டாவது ரி20 போட்டி நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது, இந்திய அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரி்சோதனைகைளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று (27) முன்னெடுக்கப்படவுள்ள பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் சில வீரர்களுக்கு தொற்று உறுதியானால், போட்டியை நாளைய தினம் நடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
