புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் இருவருக்கு எழுந்தமான பி.சி.ஆர்.பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 22.06.21 அன்று புதுக்குடியிருப்பு இலங்கை வங்கியின் முன்னால் புதுக்குடியிருப்பு பிரதேச பொது சுகாதார பணிமனையினரால் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,அதன் முடிவுகள் கடந்த 25.06.21 அன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வங்கியில் பணியாற்றும் இருவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிவனநகர் பகுதியினை சேர்ந்த ஒருவருக்கும்,யாழ்ப்பாணத்தில் இருந்து பணிக்கு வரும் ஒருவருக்கும் கோவிட் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகளவான மக்கள் வங்கியில் கூடி நின்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்நிலையில், வங்கியில் பணியாற்றும் 15 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை இன்று புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எவருக்கும் நோய் தொற்றுக்கான அறிகுறி (பொசிட்டிவ்) காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
