மட்டக்களப்பில் கோவிட் தொற்றினால் 7 நாட்களில் 39 பேர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் கோவிட் தொற்றினால் 39 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து உயிரிழப்பு 223 ஆக அதிகரித்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலயத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன்,257 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகததார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,வவுணதீவு பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட இருவர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 75 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேருக்கும் பட்டிப்பளை, வவுணதீவு, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 100 வீதம் 30 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், வாழைச்சேனை, கிரான், வாகரை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உட்பட 257 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டது.
அதேவேளை 20 வயது தொடக்கம் 40 வயதுவரை 9 பேரும், 40 வயது தொடக்கம் 60 வயதுவரை 66 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 147 பேர் உட்பட 223 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 53 வீதம் ஆண்கள் ஆகும்.
இதுவரை 30 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி 93 வீதமானவர்களான 2 இலச்சத்து 70 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 39 வீதமான ஒரு இலச்சத்து 13 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன்,தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
