வடக்கில் மேலும் 30 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் உட்பட வடக்கில் மேலும் 30 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவ்வாறு 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலையில் 03 பேருக்கும் (உயிரிழந்த முதியவர் உட்பட), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவருக்கும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.