சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது: சம்பிக்க ரணவக்க

Champika Ranawaka Sri Lanka Economic Crisis Sri Lanka Government
By Farook Sihan Nov 06, 2023 08:57 AM GMT
Farook Sihan

Farook Sihan

in அரசியல்
Report

அரசாங்கம் கடந்த 03 வருடங்களாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. தொழில் வழங்கினால் சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது. இதனால் வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவிக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று(05.11.2023) சம்மாந்துறையில் 'கட்டியெழுப்புவோம்' எனும் தலைப்பில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்: அமைச்சர் அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்: அமைச்சர் அறிவிப்பு

டொலர் பற்றாக்குறை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும். கடந்த வருடம் எங்களுக்கு பெற்றோல், உரம், மின்சாரம், கேஸ் என்று எதுமே இருக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எங்களிடம் டொலர் இல்லையென்று கூறப்பட்டது.

வங்கியில் நாங்கள் ஒரு கடனைப் பெற வேண்டுமென்றால் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலமாக வியாபாரத்தை சரியாக செய்யாது விட்டால் கடனை மீளச் செலுத்துவது கடினமாக இருக்கும். அப்போது வங்கி நம்மை வங்குரோத்து அடைந்தவர் என்று கண்டு கொள்ளும். இந்நிலையில் கடனுக்காக எமது சொத்தை வங்கியில் வைத்திருந்தால் அதனை வங்கி எடுத்துக் கொள்ளும்.

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது: சம்பிக்க ரணவக்க | Govt Has No Money To Pay Salaries Champika

இது போலவே கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்று வீதிகள், விமான நிலையங்கள் போன்றவற்றை அமைத்தோம். அவற்றால் எமக்கு எந்த இலாபமுமில்லை. அதனால் கடனை அடைக்க முடியாது போனது. நாடு வங்குரோத்தடைந்தது.

எங்களுக்கு கடனாக டொலர்களை தந்தவர்கள் வழங்கு தொடர்ந்துள்ளார்கள். இந்நிலையில் உலக வங்கி கடன்களை தந்தவர்களிடம் நீங்கள் அவசரப்பட வேண்டாம், கடனை தருவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். அதனால் வழக்குத் தொடர வேண்டாமென்று வேண்டியுள்ளது. இப்போது அரசாங்கம் மின்சாரத்தின் விலையையும், பால் மாவின் விலையையும், கேஸ், எரிபொருட்ளின் விலையையும், ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டடம் சீனா வசமாகலாம்

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டடம் சீனா வசமாகலாம்

புதிய திட்டம்

இதைத்தான் அரசாங்கம் செய்கின்றதே ஒழியே உற்பத்தியை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. ஒரு சில தொழில்களை வழங்கினாலும், இதிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் படித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 2025 முதல் 2028 ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரலாமென்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம்.

இதற்கு முதல் எங்கள் கடனை அடைக்கும் பணம் இக்காலப் பகுதியில் எம்மிடமில்லை. அதனால் 2028 இலக்காகக் கொண்டு செயற்படுகிறோம். இந்த குறுகிய 03 வருட காலத்தில் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வழியை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது: சம்பிக்க ரணவக்க | Govt Has No Money To Pay Salaries Champika

வைத்தியசாலைகளில் மருந்து வேண்டும். தாதிகள் இருக்க வேண்டும். வைத்தியர்கள் இருக்க வேண்டும். உபகரணங்கள் இருக்க வேண்டும். இதனால் எங்களினால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், இங்கு வந்து வாக்குறுதிகளை தருவார்கள். அவற்றை நிறைவேற்றும் பணம் யாரிடமும் கிடையாது.

மாணவர்கள் காலையில் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். பாடசாலைகளில் உபகரணங்கள் இருக்க வேண்டும்.இதனை விட உணவுப் பிரச்சினை உள்ளது. பசளையில்லா காரணங்களினால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மூலமாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. சூரிய சக்தி மின்சாரத்தை புத்தளம் முதல் முல்லைத்தீவு வரை மேற்கொள்ள முடியும். யாழ் பிரதேசத்தில் காற்றாடி மூலமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அதனால் புதிய முறையில் டொலரை தேட வேண்டியுள்ளது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு...! கடும் விசனத்தில் ஜனாதிபதி

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு...! கடும் விசனத்தில் ஜனாதிபதி

டிஜிடல் சேவை

அயல்நாடான தமிழ் நாடு கேரளா போன்ற பிரதேசங்கள் மிகவும் முன்னேற்றம் அடைவதற்கு காரணம் என்ன? கொரியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் மிகவும் வேகமாக முன்னேறுவதற்கு காரணம் என்ன? அவர்கள் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை விடவும் டிஜிடல் சேவையை அனுப்புவதன் மூலமாகத்தான் முன்னேற்றமடைந்துள்ளனர்.

ஆதலால் டிஜிடல் மூலமாக அதிகம் சம்பாதிக்க முடியும். இந்த வேலைத் திட்டங்களை செய்வதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது. அதுதான் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும்.கடந்த 40 வருடங்களில் தமிழ் இளைஞர்கள் நினைத்தார்கள்.

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது: சம்பிக்க ரணவக்க | Govt Has No Money To Pay Salaries Champika

தமிழர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கினால் அதன் மூலமாக வளமான நாட்டை உருவாக்க முடியுமென்று நினைத்தார்கள். அதன் மூலமாக அவர்கள் மட்டுமல்ல நாங்களும் பாதிக்கப்பட்டோம். ஜே.வி.பி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று புரட்சி செய்தார்கள். அவர்களும் அழிந்து போனார்கள்.

முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதிகமான உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டும். பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்ற வேண்டும்.

தந்தைக்கு பின் மகன், தாய்க்கு பின் மகள் என்ற அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ் சகோதரியின் ஆதங்கம்: கண்டு கொள்ளாது கடந்து செல்லும் பெரும்பான்மை இன மக்கள் (Video)

தமிழ் சகோதரியின் ஆதங்கம்: கண்டு கொள்ளாது கடந்து செல்லும் பெரும்பான்மை இன மக்கள் (Video)

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US