கோறளைப்பற்று மத்தியில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள் நாற்பத்தி எட்டு (48) பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் நாற்பத்தி நான்கு (44) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இன்றுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் அன்டிஜன் பரிசோதனையில் எட்டு (08) பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri