வடக்கில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 31 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று யாழ்.பரிசோதனைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர், யாழ்.போதனா
வைத்தியசாலையில் 04 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில்
ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
