ஆலயத்தில் ஒன்று கூடியவர்கள் உள்ளிட்ட 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் ஆலயத்தில் ஒன்று கூடியமையால் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (08.10) வெளியாகின.
அதில் வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் சுகாதார விதிமுறைகளை மீறி ஒன்று கூடியமை தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் உட்பட 42 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் முடக்க நிலை தளர்த்தப்பட்டுள்ள நிலைணயில் வவுனியாவில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
