சவேந்திர சில்வாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு(Shavendra Silva) அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
சிவில் கடமைகளில் இருந்து விலகியதன் பின்னர் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அவர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(20.05.2024) இடம்பெற்ற டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
டெங்கு தடுப்பு வாரம்
குறித்த கூட்டமானது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை டெங்கு தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam