புதிய சீன மக்கள் குடியரசுக்கான இலங்கை தூதுவர் பதவியேற்பு
சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மஜிந்த ஜயசிங்க (Majintha Jayesinghe ) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாக பாலித கொஹோனவின் (Palitha Kohona) பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவி பல மாதங்களாக வெற்றிடமாக இருந்தது.
இலங்கை வெளிவிவகார சேவை
இதனையடுத்தே, மஜிந்த ஜயசிங்க அந்த பதவியை நேற்று (20.05.2024) பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
தூதுவர் மஜிந்த ஜயசிங்க 1998ஆம் ஆண்டு இலங்கை வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார்.
The Ambassador-designate of Sri Lanka to the People’s Republic of China, Majintha Jayesinghe assumed duties today, 20 May 2024. @MFA_SriLanka #DiplomacyLk #lka pic.twitter.com/PcVMWTiZj4
— Sri Lanka Embassy in China (@SLembassycn) May 20, 2024
அத்துடன் ஒஸ்ரியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றின் தூதுவராகவும், மலேசியாவில் துணை உயர் ஆணையராகவும் பணியாற்றியதுடன் சீனாவின் தூதரக அதிகாரியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |