தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இறுதியில் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,கட்சியின் ஊடக பேச்சாளராக சுரேன் குருசாமி தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri