பொலிஸ் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கல்: கோவிந்தன் கருணாகரம்
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு பொலிஸ் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கல் செய்யவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்று (12.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உரை
அத்துடன், இந்த அதிகார பரவலாக்கலானது, நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையினை வரவேற்பதுடன் அதனை ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |