நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர்: சட்டத்தரணி குருபரன்

Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Theepan Mar 14, 2026 07:32 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது என சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

சவால்களை எதிர்கொள்ள அரசிடம் திட்டங்கள் இல்லை: ஐக்கிய மக்கள் சக்தி கடும் விமர்சனம்

சவால்களை எதிர்கொள்ள அரசிடம் திட்டங்கள் இல்லை: ஐக்கிய மக்கள் சக்தி கடும் விமர்சனம்

குற்றச்சாட்டு

விசாரணையின் முக்கிய அம்சமாக, இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவரான உப தவிசாளர் திரு. ஞா. கிஷோர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகி வாதாடினார்.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில், 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடங்களுக்கு 'தகுதிச் சான்றிதழ்' (COC) கோருவது குறித்து உப தவிசாளர் விமர்சித்திருந்தார்.

இந்த உரை உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே வாதங்கள் அமைந்தன.

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர்: சட்டத்தரணி குருபரன் | Governor Who Cannot Control A Member Of Parliament

உப தவிசாளரின் உரை குறித்து வாதாடிய சட்டத்தரணி குருபரன், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக உரிம வரி மற்றும் அது சார்ந்த துணை விதிகளை உருவாக்கும் அதிகாரம் சபைக்கு உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன் சார்ந்து பேசுவது ஒரு உறுப்பினரின் கடமையாகும்.

உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்: சர்வதேச சந்தையில் தலைகீழ் மாற்றம்

இலங்கையில் தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்: சர்வதேச சந்தையில் தலைகீழ் மாற்றம்

விசாரணை

தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சட்டத்தரணி, "உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்" என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டைச் சாடினார்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது என அவர் தெரிவித்தார்.

மேலும், முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர்: சட்டத்தரணி குருபரன் | Governor Who Cannot Control A Member Of Parliament

குறிப்பிட்ட ஒரு கட்சி நகர சபையைக் கைப்பற்றும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உள்ளதாக சட்டத்தரணி குருபரன் தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.

தற்போது அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வார காலத்திற்குள் எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணை அதிகாரி க. அரியநாயகம் தனது இறுதி அறிக்கையை வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம்! கடந்த ஆண்டில் 200 பேர் மரணம் - 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம்! கடந்த ஆண்டில் 200 பேர் மரணம் - 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US