ஊடகவியலாளர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக கூறும் ஆளுநர் செந்தில்(Photos)
தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள
ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (01.06.2023) நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராகச் செந்தில் தொண்டமான் பதவியேற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆளுநரின் வருகையின் முதல் சந்திப்பாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மின்சார வசதியற்ற நிலை
இதன்போது ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட ஆளுநர் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இன்னும் 16,700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் வாழ்ந்துவருவதாக கூறிய அவர், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தனது கவனத்திற்குக் கொண்டுவரும்போது உடனடி தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி உட்படப் பல வளங்கள்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி பெரியபொறுப்பினை என்னிடம் வழங்கியுள்ளார். இந்த இக்கட்டான நிலையில் கிழக்கு மாகாணத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்யவேண்டும்.
ஜனாதிபதியின் நம்பிக்கையினை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.
இலங்கையானது சுமார் 50 பில்லியனுக்கு மேற்பட்ட கடனில் உள்ளது.
இது இவ்வாறே சென்றால் எமது பேரப்பிள்ளைகள் இதனைவிட அதிகமான கடனைப்பெற்றிருக்கும் நிலையேற்படும்.
இந்த கடனை செலுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மாகாணத்திற்கும் இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி உட்படப் பல வளங்கள் உள்ளது. ஒரே வருடத்தில் 10 பில்லியன் டோலரை பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் நாங்கள் வெளிநாடுகளில் கையேந்திக்கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam