கிழக்கு மாகாண ஆளுநர் பதவி: புலம்பெயர் தமிழர்களின் பொதுச் செயலாளர் கோரிக்கை
மௌபிம ஜனதா கட்சிக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர்களின் பொதுச் செயலாளர் நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலையில் 72 வீதமான பணிகள் மீன்பிடியை அடிப்படையாகக் கொண்டவை, அங்கிருந்து பல நாடுகளுக்கு மீன்களை
ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்தநிலையில் மூன்று மாதங்கள் தமது முன்னேற்றத்தை கவனித்த பிறகு, தாம் அந்த பதவிக்கு பொருத்தமானவரா இல்லையா என்பதை முடிவு செய்யுமாறு நிமலன் விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அரசியல் நிகழ்ச்சி
முன்னாள் ஆளுநர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக எதையும் செய்யவில்லை, மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அவர் எதனையும் செய்யவில்லை.

செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மலையகத்தில் இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியாது.
கிழக்கு மாகாணத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலும் அரசாங்கத்தின் பொறிமுறைகளுமே பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
சிங்களம், தமிழ் அல்லது முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. எனவே இந்த சமூகங்களே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் நிமலன் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri