புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள் என நேற்று (17.05.2023) பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மூன்று புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மூன்று புதிய ஆளுநர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஆளுநர்களுக்கு எதிராக மக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் வரக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். ஆளுநர்களை நியமிப்பதும் பதவி நீக்குவதும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை முன்னாள் ஆளுநர்கள் மறந்து செயற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Optical Illusion: இந்த படத்தில் முதலில் எதை கவனித்தீர்கள்.. வாழ்க்கையில் எப்படி இருப்பீங்க தெரியுமா? Manithan

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri
