வடக்கு - கிழக்கு ஆளுநர்களாக தமிழர் உட்பட 3 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் (Video)
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (17.05.2023) புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
முதலாம் இணைப்பு
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இன்று (17.05.2023) முற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்வும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஆளுநர்கள் நியமனம்
ஆளுநர் பதவிகளுக்கு, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கர்ணகொட ஆகியோர் இதற்கு முன்னர் இந்த பதவிகளை வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW